ராகுல் காந்தி
ராகுல் காந்திANI

சாதிவாரி கணக்கெடுப்பு நடப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

“சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, என் வாழ்க்கையின் நோக்கம்”.
Published on

தில்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய சமூக நீதி மாநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பு நடப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம். சாதிவாரி கணக்கெடுப்பு நடப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு எடுக்கும் மிக முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, என் வாழ்க்கையின் நோக்கம்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பிரதமர் பதற்றம் அடைந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனால், அது புரட்சிகரமான தேர்தல் அறிக்கை. 90 சதவீத இந்திய மக்களுக்கு அநீதி நடக்கிறது. அநீதியைப் பற்றிப் பேசினால் என்னை எதிர்க்கிறார்கள்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in