நீட் குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை!

கடந்த மே 5 அன்று நடைபெற்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் 67 தேர்வர்கள் 720-க்கு 720 எடுத்தது சர்ச்சையானது.
நீட் குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோரிக்கை!
ANI

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டி கோரிக்கை விடுத்தார்.

`நாடாளுமன்றத்தில் இருந்து தேசத்துக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம். நீட் பிரச்சனை நாடாளுமன்றத்துக்கு முக்கியம் என்று மாணவர்களுக்கு நாம் செய்தி அனுப்ப வேண்டும். இந்த செய்தியை அனுப்ப அது குறித்து நாம் விவாதிக்க வேண்டும்’ என்று மக்களவையில் பேசினார் ராகுல் காந்தி. மேலும் நீட் தேர்வு குறித்து விவாதிக்க தனியாக ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு, `நீங்கள் ஆலோசனைகள் அளிக்கலாம், ஆனால் (அது குறித்து) நான் முடிவெடுப்பேன்’ என்று தெரிவித்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. மேலும், `குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்த பிறகே நீட் தேர்வு குறித்துப் பேச முடியும்’ என்று ராகுல் காந்திக்கு பதிலளித்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கடந்த மே 5 அன்று நடைபெற்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் 67 தேர்வர்கள் 720-க்கு 720 எடுத்தனர். நீட் தேர்வில் கலந்து கொண்ட 1563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் நாட்டில் புயலைக் கிளப்பியது. இதற்குப் பிறகு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் ஜூன் 30 அன்று மறு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த மறு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த முடிவுகள் படி, நீட் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் எண்ணிக்கை 61 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in