அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு: ராகுல் காந்தி

"வலிமையான பெண்கள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவார்கள்"
Rahul Gandhi promises 50 pc reservation for women in government jobs if Congress voted to power
Rahul Gandhi promises 50 pc reservation for women in government jobs if Congress voted to power

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதியளித்துள்ளார்.

இன்றைய சூழலில்கூட நாட்டில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே வேலைபுரிபவராக உள்ளார். அரசுப் பணிகளைப் பொறுத்தவரை 10-ல் ஒருவர் மட்டுமே அரசுப் பணிகளில் பணிபுரிந்து வருகிறார்கள் என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"இந்திய மக்கள்தொகையில் பெண்கள் 50% இருக்கமாட்டார்களா? உயர்கல்வியில் 50% பெண்கள் இருக்கமாட்டார்களா? அப்படி இருக்கும்போது, நம்முடைய கட்டமைப்பில் அவர்களுடைய பங்கு ஏன் இன்னும் குறைவாகவே இருக்கிறது. அரசாங்கத்தில் பெண்களின் பங்களிப்பு சரிசமமாக இருந்தால் மட்டுமே பெண்களின் முழுத் திறனைப் பயன்படுத்த முடியும். எனவே, புதிய அரசுப் பணிகள் அனைத்திலும் பெண்களுக்கென்று 50% இடங்கள் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவுள்ளோம். அரசுப் பணிகளில் 50% பெண்கள் இருப்பது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் வலிமையை சேர்க்கும். வலிமையான பெண்கள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவார்கள்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in