

கேரளத்தில் ஆட்சியில் உள்ள எல்.டி.ஃபை பிரதமர் மோடிதான் கட்டுப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
கேரள சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன்படி கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
சமரசம் செய்துகொண்ட பிரதமர் மோடி
நரேந்திர மோடி ஒரு சமரசம் செய்துகொண்ட பிரதமர் என்பது உங்களுக்கு தெரியும். அமெரிக்கா-இந்திய ஒப்பந்தத்தின் விவரங்களைப் பார்த்தால், சமரசம் செய்யப்பட்டவரைத் தவிர வேறு எந்தப் பிரதமராலும் அதில் கையெழுத்திட்டிருக்க முடியாது. அவர் இந்தியாவின் முழு விவசாயத் துறையையும் அமெரிக்க விவசாயிகளுக்கு திறந்துவிட்டார். நமது எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்கர்களிடம் ஒப்படைத்துவிட்டார். இன்று இந்தியா தான் விரும்பும் நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்க முடியாது, அனுமதி பெற வேண்டும். அவர் டொனால்ட் டிரம்ப்பிடம் எப்படி சமரசம் செய்து கொண்டார் என்பதை நான் விரிவாக பேசியுள்ளேன். 35 லட்சம் பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில் யார் யார் பெயர்களெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் டிரம்ப் பொதுவெளியிலேயே பிரதமர் மோடியை அவமானப்படுத்தி, ”நான் எப்போது வேண்டுமானாலும் மோடியின் அரசியல் வாழ்க்கையை அழித்துவிட முடியும்” என்று மிரட்டுகிறார். அவர் சொல்வது முற்றிலும் சரி.
பாஜகவின் கையில் எல்.டி.எஃப்
கேரளத்தில் பிரதமர் மோடிக்கு கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் ஆட்சி அமைவதில் விருப்பமில்லை. ஏனென்றால், அவரால் எல்.டி.எஃப் அரசை அவரால் கட்டுப்படுத்த முடியும் என்பது அவருக்குத் தெரியும். ஊழலில் சிக்கி இருப்பதால் எல்.டி.எஃப் அரசால் தில்லியில் அவருக்கு எதிராக சவால் விடுக்க முடியாது. ஆனால், தில்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவரை தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி காங்கிரஸ் கட்சி தான் என்பதால், அவர் கேரளாவில் எல்டிஎஃப்டியை வலுப்படுத்த விரும்புகிறார். எல்.டி.எஃப் பாஜகவால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. கேரளத்தில் காங்கிரஸ் எல்.டி.எஃப் கூட்டணிக்கு எதிராகப் போராடுகிறது. தில்லியில் ஆட்சியில் இருக்கும்வரை கேரளத்தில் எல்.டி.எஃப் கட்சியை எப்படி இயக்குவது என்று பாஜகவுக்கு தெரியும். பாஜகவுக்கு எதிராகப் போராடுபவர்கள் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாவது தான் அதற்கான முதல் ஆதாரம். நானே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறேன். என் மீதும் 36 வழக்குகள் உள்ளன. ஆனால், கேரள முதலமைச்சருக்கு பாஜகவிடமிருந்து எந்தவித தாக்குதலும் இல்லை” என்றார்.
Senior Congress leader Rahul Gandhi criticized that Prime Minister Modi is controlling the ruling LDF in Keralam.