மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
டலாஸ் சென்றடைந்த ராகுல் காந்தியை, அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் வரவேற்றார்கள்.
அமெரிக்கப் பயணம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாவது:
"இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான நுட்பமான உரையாடல்களை எதிர்நோக்கி ஆவலுடன் உள்ளேன்" என்றார்.
ராகுல் காந்தி மக்களவைத் தலைவர் ஆன பிறகு முதல் அமெரிக்கப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது, செப்டம்பர் 8-ல் டலாஸில் இருக்கும் ராகுல் காந்தி டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாஷிங்டன் டிசி செல்கிறார். தேசிய பிரஸ் கிளப், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பெரும் சிந்தனையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.