மகாத்மா காந்தி குறித்த கருத்து: மோடிக்கு பதிலளித்த ராகுல் காந்தி

“காந்தி என்ற படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி உலகில் யாருக்குமே தெரிந்திருக்காது” என மோடி கூறினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திANI

மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே படத்தைப் பார்க்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “காந்தி என்ற படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி உலகில் யாருக்குமே தெரிந்திருக்காது. 1982-ல் ரிச்சர்ட் அட்டன்போரோ எடுத்த ‘காந்தி’ குறித்த படம் வெளியான பிறகுதான் அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது” என பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மோடி அளித்துள்ள பேட்டிக்கு காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலரும் அவர்களது கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே படத்தைப் பார்க்க வேண்டும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in