23-வது சட்ட ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் முர்மு

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனையை மேற்கொண்டது 22-வது சட்ட ஆணையம்
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 23-வது சட்ட ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார். 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய சட்ட ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார் முர்மு.

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்ட ஆணையம், நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் தேவைக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வரவும், தேவையைக் கருத்தில் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசுக்கு அறிக்கைகளை வழங்கும்.

கடந்த 22-வது சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரித்து ராஜ் அவாஸ்தி பதவி வகித்தார். மிக முக்கியமாக, நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனையை மேற்கொண்டது 22-வது சட்ட ஆணையம். ஓரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அறிக்கையைத் தயார் செய்தது 22-வது சட்ட ஆணையம்.

ஆனால் ஆகஸ்ட் 31-ல் இந்த சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் ஓரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. புதியதாக அமையவுள்ள 23-வது சட்ட ஆணையம் இந்தப் பணியை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23-வது சட்ட ஆணையம், 2024 செப்.01 முதல் 2027 ஆகஸ்ட் 31 வரை செயல்படும். இந்த ஆணையத்தில், தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் பதவியில் இருப்பார்கள். இந்த் ஆணையத்தின் அலுவல் சார உறுப்பினர்களாக மத்திய சட்டமன்றத் துறை செயலாளரும், சட்ட விவகாரங்கள் துறை செயலாளரும் பதவி வகிப்பார்கள்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், 23-வது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in