சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத் தலைவர்!
சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத் தலைவர்!@rashtrapatibhvn

சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத் தலைவர்!

பத்ம விருது பெற்ற வீராங்கனைகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது.
Published on

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் இணைந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேட்மிண்டன் விளையாடி உள்ளார்.

பத்ம விருது பெற்ற வீராங்கனைகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (ஜூலை 11) நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பத்ம விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உரையாற்ற உள்ளார்.

இதில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடி உள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in