வந்தே பாரத்துக்கு மட்டுமே முன்னுரிமை: பயணியின் பதிவும், ரயில்வேயின் விளக்கமும்

ரயில்வே துறையும், ஐஆர்சிடிசி-யும் எப்படி வேலைபார்க்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவிடுகிறேன்
வந்தே பாரத்துக்கு மட்டுமே முன்னுரிமை: பயணியின் பதிவும், ரயில்வேயின் விளக்கமும்
ANI
1 min read

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நேற்று (ஆகஸ்ட் 27) வதோதரா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட தேஜஸ் ரயிலில் பயணித்த நபரின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பதிவு பின்வருமாறு:

`நான் 82901 எண் தேஜஸ் விரைவு ரயிலுக்குள் இருக்கிறேன். மும்பை மத்திய ரயில் நிலையத்தில் மதியம் 3.45 மணி அளவில் ரயிலில் ஏறினேன். இரவு 10.30 மணி அளவில் ரயில் அஹமதாபாத்துக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் கனமழையின் காரணமாக ரயில் வதோதராவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவுமே இல்லை. ஏ.சி.யும் அணைக்கப்பட்டுவிட்டது. மழையால் எங்களின் ரயில் சேவை பாதிக்கப்பட்ட அதே நேரத்தில், எங்களைக் கடந்து சென்று, அஹமதாபாத்துக்குச் சென்றுள்ளது வந்தே பாரத் ரயில். வதோதராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் எங்கே செல்வது? எங்கள் ரயிலில் முதியவர்களும், குழந்தைகளும் இருக்கிறார்கள்.

வந்தே பாரத் ரயிலால் வதோதராவில் இருந்து அஹமதாபாத்துக்குச் செல்ல முடிந்தால் மற்ற ரயில்களால் ஏன் செல்ல முடியாது? வந்தே பாரத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும் செய்திகளை முன்பு கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக அதைப் பார்க்கிறேன். ரயில்வே துறையும், ஐஆர்சிடிசி-யும் எப்படி வேலைபார்க்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவிடுகிறேன்’, என்றார்.

இந்தப் பதிவுக்குத் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு வழியாக பதிலளித்துள்ள இந்திய ரயில்வே, `தண்டவாளங்களைத் தாண்டி வெள்ள நீர் ஒடிக்கொண்டிருந்தது. வந்தே பாரத் ரயிலில் இருக்கும் உயர்ரக தொழில்நுட்பம், தண்டவாளத்துக்கு மேலே 200 மி.மீ.க்கும் அதிகமான உயரத்தில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், அதை ரயிலுக்குள் புகாமல் தடுக்கும்.

ஆனால் தண்டவாளத்துக்கு 150 மி.மீ.க்கும் அதிகமாக வெள்ள நீர் இருந்தால் பிற ரயில்களால் அதில் பயணிக்க முடியாது’ என்று விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in