இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 68.92% வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
ANI
1 min read

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் நடைபெற்றது. கேரளத்தில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 1,202 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 68.92% வாக்குகளும், குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 43.01% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மணிப்பூர் (68.48), சத்தீஸ்கர் (63.92), மேற்கு வங்கம் (60.60) மற்றும் அஸ்ஸாமில் (60.32) அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in