
பொறியியல் துறையின் அற்புதமான, உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டுக்கு நாளை (ஜூன் 6) பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ரயில் பாலம், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாலம் ரூ. 1,400 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ளது. 1,315 மீ. நீளமும் 359 மீ. உயரமும் கொண்டுள்ளது. புகழ்பெற்ற பாரீஸ் ஈபிள் கோபுரத்தை விடவும் 35 மீ. உயரமானது.
கத்ரா - ஸ்ரீநகர் வழித்தடத்துக்கான வந்தே பாரத் ரயில் இதன் மீது முதலில் செல்லவுள்ளது. கத்ராவிலிருந்து ஸ்ரீநகரை இனிமேல் 3 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
27,000 டன்களைக் கொண்ட இரும்புகளைக் கொண்டு செனாப் பாலம் கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கங்களைத் தாங்கும் தன்மைகொண்ட இந்த பாலம், 120 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் Afcons Infrastructure, VSL India மற்றும் தென் கொரியாவின் Ultra Construction ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்பாலத்தைக் கட்டியுள்ளன.
செனாப் பாலத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கும், இந்தியாவின் இதர பகுதிகளும் ரயில்வே பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளன.