மோடி 3.0: அமைச்சரவையின் முழுப் பட்டியல்!

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
மோடி 3.0: அமைச்சரவையின் முழுப் பட்டியல்!
ANI

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நரேந்திர மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மோடி பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள். பாஜக அல்லாமல் கூட்டணிக் கட்சிகளிலிருந்து 11 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு தலா இரு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து எல். முருகன் மீண்டும் மத்திய அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை.

மத்திய அமைச்சரவைப் பட்டியலில் பெண் அமைச்சர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.

கேரளத்திலிருந்து முதன்முறையாக மக்களவைக்குத் தேர்வாகியுள்ள சுரேஷ் கோபிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸில் அஜித் பவார் தரப்புக்கு ஒரு மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரஃபுல் படேலின் பெயர் இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், தான் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இருந்துள்ளதால், இது தனக்கு பதவிக்குறைப்பாக இருக்கும் என்று கருதுவதாக பிரஃபுல் படேல் கூறினார். இதுகுறித்து பாஜக தலைமையிடம் தெரியபடுத்தியுள்ளதாகவும், பாஜக தரப்பிலிருந்து இது சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இது கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.

முழு அமைச்சரவைப் பட்டியல்:

கேபினட் அமைச்சர்கள்:

  • ராஜ்நாத் சிங் - உத்தரப் பிரதேசம்

  • அமித் ஷா - குஜராத்

  • நிதின் கட்கரி - மஹாராஷ்டிரம்

  • ஜெ.பி. நட்டா - ஹிமாச்சலப் பிரதேசம்

  • ஷிவ்ராஜ் சிங் சௌஹான் - மத்தியப் பிரதேசம்

  • நிர்மலா சீதாராமன் - மாநிலங்களவை

  • ஜெய்சங்கர் - மாநிலங்களவை

  • மனோஹர் லால் கட்டர்- ஹரியாணா

  • ஹெச்.டி. குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்) - கர்நாடகம்

  • பியூஷ் கோயல் - மஹாராஷ்டிரம்

  • தர்மேந்திர பிரதான் - ஒடிஷா

  • ஜிதன் ராம் மஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா) - பிஹார்

  • ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்) - பிஹார்

  • சர்வானந்த சோனோவால் - அசாம்

  • வீரேந்திர குமார் - மத்தியப் பிரதேசம்

  • ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்) - ஆந்திரப் பிரதேசம்

  • பிரல்ஹாத் ஜோஷி - கர்நாடகம்

  • ஜூவல் ஓரம் - ஒடிஷா

  • கிரிராஜ் சிங் - பிஹார்

  • அஷ்வினி வைஷ்ணவ் - மாநிலங்களவை

  • ஜோதிராதித்ய சிந்தியா - மத்தியப் பிரதேசம்

  • பூபேந்திர யாதவ் - ஒடிஷா

  • கஜேந்திர சிங் ஷெகாவத் - ராஜஸ்தான்

  • அன்னபூர்ணா தேவி - ஜார்க்கண்ட்

  • கிரண் ரிஜிஜு - ஆந்திரப் பிரதேசம்

  • ஹர்தீப் சிங் புரி - மாநிலங்களவை

  • மன்சுக் மாண்டவியா - குஜராத்

  • கிஷண் ரெட்டி - தெலங்கானா

  • சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி) - பிஹார்

  • சி.ஆர். பாட்டீல் - குஜராத்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):

  • ராவ் இந்திரஜித் சிங் - ஹரியாணா

  • ஜிதேந்திர சிங் - ஜம்மு

  • அர்ஜுன் ராம் மேக்வால் - ராஜஸ்தான்

  • பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனை) - மஹாராஷ்டிரம்

  • ஜெயந்த் சௌதரி (ராஷ்ட்ரீய லோக் தளம்) - உத்தரப் பிரதேசம்

இணையமைச்சர்கள்:

  • ஜிதின் பிரசாத் - உத்தரப் பிரதேசம்

  • ஸ்ரீபத் நாயக் - கோவா

  • பங்கஜ் சௌதரி - உத்தரப் பிரதேசம்

  • ராம்தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சி (ஏ)) - மாநிலங்களவை

  • ராம்நாத் தாக்குர் (ஐக்கிய ஜனதா தளம்) - பிஹார்

  • நித்யானந்த் ராய் - பிஹார்

  • அனு பிரியா படேல் (அப்னா தளம்) - உத்தரப் பிரதேசம்

  • சோமண்ணா - கர்நாடகம்

  • சந்திரசேகர் (தெலுங்கு தேசம்) - ஆந்திரப் பிரதேசம்

  • எஸ்பி சிங் பாகெல் - உத்தரப் பிரதேசம்

  • ஷோபா கரண்ட்லாஜே - கர்நாடகம்

  • கீர்த்தி வர்தன் சிங் - உத்தரப் பிரதேசம்

  • பிஎல் வர்மா - மாநிலங்களவை

  • ஷாந்தனு தாக்குர் - மேற்கு வங்கம்

  • சுரேஷ் கோபி - கேரளம்

  • எல். முருகன் - மாநிலங்களவை

  • அஜய் டம்டா - உத்தரகண்ட்

  • பண்டி சஞ்சய் குமார் - தெலங்கானா

  • கம்லேஷ் பாஸ்வான் - உத்தரப் பிரதேசம்

  • பகிராத் சௌதரி - ராஜஸ்தான்

  • சதீஷ் சந்திர துபே - பிஹார்

  • சஞ்சய் சேத் - ஜார்க்கண்ட்

  • ரவ்னீத் சிங் பிட்டு - பஞ்சாப்

  • துர்கா தாஸ் - மத்தியப் பிரதேசம்

  • ரக்‌ஷா நிகில் கட்சே - மஹாராஷ்டிரம்

  • சுகந்தா மஜும்தார் - மேற்கு வங்கம்

  • சாவித்ரி தாக்குர் - மத்தியப் பிரதேசம்

  • தோக்கன் சாஹு - சத்தீஸ்கர்

  • ராஜ் பூஷண் சௌதரி - பிஹார்

  • பூபதி ராஜு ஸ்ரீநிவாசா ராஜு வெர்மா - ஆந்திரப் பிரதேசம்

  • ஹர்ஷ் மல்ஹோத்ரா - தில்லி

  • நிமுபென் பாம்பனியா - குஜராத்

  • முரளிதர் மொஹோல் - மஹாராஷ்டிரம்

  • ஜார்ஜ் குரியன் - கேரளம்

  • பவித்ர மார்கெரிடா - அசாம்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in