பிரதமர் மோடி மேடையில் கண்ணீர் சிந்துவார்: ராகுல் காந்தி

"நீங்கள் பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துபோயுள்ளார்."
பிரதமர் மோடி மேடையில் கண்ணீர் சிந்துவார்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி பயத்தில் இருப்பதாகவும், அடுத்ததாக மேடையில் கண்ணீரை சிந்த நேரிடும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் விஜயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

"மோடி உங்களுடைய கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறார். சில நேரங்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் குறித்து பேசுகிறார். சில நேரம் தட்டுகளில் ஒலி எழுப்பச் சொல்வார். சில நேரம் மொபைலில் ஒளி எழுப்பச் சொல்வார்.

ஏழைகளிடமிருந்து மட்டும்தான் பிரதமர் மோடி பணம் பறித்துள்ளார். நாட்டிலுள்ள 40 சதவீத வளங்களை வெறும் 1 சதவீதத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

நீங்கள் பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துபோயுள்ளார். மேடையில் அவர் அடுத்தது கண்ணீர் கூட சிந்துவார்" என்றார் ராகுல் காந்தி.

அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா வாரிசுமை வரி குறித்து பேசியது பூதாகரமானததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பிரசார மேடைகளில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய சொத்து வாரிசுகளுக்குச் செல்லாது என பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in