ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக தில்லியில் இன்று வெளியிட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரது முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக குழு அமைத்தது. வாக்குறுதிகளுக்கு மக்களிடமிருந்து 15 லட்சம் பரிந்துரைகளை பாஜக பெற்றுள்ளது.

ராஜ்நாத் சிங் தலைமையிலான தேர்தல் அறிக்கைக் குழு இருமுறை கூடி விவாதித்தது.

இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சம்:

  • ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும்.

  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் திட்டம் நடைமுறையில் இருக்கும்.

  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

  • ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்படும்.

  • ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் கடன் உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும்.

  • ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்

  • உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை முன்னேற்றுவோம்.

  • வட இந்தியா, தென் இந்தியா, கிழக்கு இந்தியாவில் தலா ஒரு புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in