நீருக்கடியில் முதல் மெட்ரோ: பள்ளி மாணவர்களுடன் பயணித்த பிரதமர் மோடி!

கொல்கத்தாவில் ரூ. 15,400 கோடி மதிப்புடைய பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
நீருக்கடியிலான மெட்ரோ ரயிலில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி
நீருக்கடியிலான மெட்ரோ ரயிலில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடிANI
1 min read

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாட்டின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் அவர் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி
பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடிANI

கொல்கத்தாவில் ரூ. 15,400 கோடி மதிப்புடைய பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார். இத்துடன் நீருக்கடியில் கட்டமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் மெட்ரோ சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார்.

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடியபடி பயணித்தார்.

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்ANI

பிரதமருடன் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் பயணித்தார்கள்.

கொல்கத்தாவின் எஸ்பிலனேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜெய் ஸ்ரீ ராம், மோடி மோடி என முழக்கங்களை எழுப்பி தொண்டர்கள் வரவேற்றார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in