பிரதமர் மோடி சற்று நேரத்தில் உரை: நடைமுறைக்கு வருகிறதா சிஏஏ?

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்புடைய அறிவிக்கை இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார்.

பிரதமர் மோடி எதைப் பற்றி உரையாற்றவிருக்கிறார் என்கிற தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ள நிலையில், இதுதொடர்புடைய அறிவிக்கை இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இதன்மூலம், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் பிரதமர் மோடி அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in