உக்ரைன் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இன்று தொலைபேசி வாயிலாகப் பேசினார்கள்.
பிரதமர் மோடி கடந்த வாரம் போலந்து மற்றும் உக்ரைன் சென்று வந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்கள். அப்போது உக்ரைன் பயணம் குறித்து ஜோ பைடனிடம் பிரதமர் மோடி விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, இன்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ரஷிய அதிபருடனான உரையாடல் குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
"ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று பேசினேன். இருநாடுகளுக்கிடையிலான சிறப்பு மிகுந்த கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். சமீபத்திய உக்ரனை பயணம் குறித்த பார்வைகளையும் அவரிடம் பரிமாறிக்கொண்டேன். போருக்கு விரைவ அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் இருப்பதை வலியுறுத்தினேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் போர் நீடித்து வருகிறது.