
ரஷ்யா உக்ரைனுக்கு இடையிலான மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் வரவேற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பாதுகாப்பு, மற்றும் விநியோகச் சங்கிலி மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளின் முன்னேற்றம் குறித்து தலைவர்கல் விவாதித்தகாதவும் கூறப்படுகிறது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கும், ஐஎம்இஇசி (IMEEC) வழித்தடத்தை செயல்படுத்துவதற்கும் தலைவர்கள் உறுதியளித்ததாகத் தெர்விக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உச்சி மாநாட்டிற்காக இரண்டு தலைவர்களையும் பிரதமர் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் தலைவர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகப் பிரதமர் மோடி உறுதி அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Narendra Modi | PM Modi | Modi | President of the European Council | Antonio Costa | President of the European Commission | Ursula von der Leyen | Ukraine | Russia