சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்!

"ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் எங்களுடைய மனதுக்கு எப்போதும் நெருக்கமாகவே இருப்பீர்கள்."
சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்!
ANI
1 min read

சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களுக்கு மேல் சிக்கிக்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்தாண்டு ஜூன் 5 அன்று 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றார்கள். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் விண்வெளி மையத்திலேயே சுமார் 9 மாதங்களுக்கு மேல் தங்க வேண்டியதாயிற்று.

இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. இந்திய நேரப்படி இன்று காலை சுனிதா வில்லியம்ஸ் உள்பட நால்வர் விண்கலத்துக்குள் சென்றார்கள். இந்த விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தைவிட்டுப் பிரிந்தது.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு விண்கலம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய மார்ச் 1 தேதியிட்ட கடிதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.

"அமெரிக்கப் பயணங்களின்போது அதிபர் டிரம்ப் அல்லது அதிபர் பைடன் என யாரைச் சந்தித்தாலும், உங்களுடைய நலம் குறித்து நான் விசாரிப்பேன்.

உங்களுடையச் சாதனைகளை எண்ணி 140 இந்தியர்கள் எப்போதும் பெருமை கொள்வார்கள். நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் எங்களுடைய மனதுக்கு எப்போதும் நெருக்கமாகவே இருப்பீர்கள். உங்களுடைய உடல்நலம் மற்றும் உங்களுடையத் திட்டம் வெற்றியடைய இந்திய மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நீங்கள் பூமிக்குத் திரும்பியவுடன், இந்தியாவில் உங்களைச் சந்திப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன். மிகவும் புகழ்பெற்ற மகளை வரவேற்பதில் இந்நாடு மகிழ்ச்சி கொள்ளும்.

நீங்களும் வில்மோரும் பாதுகாப்பாகத் திரும்ப வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்துக்குப் பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு தனது நன்றியை வெளிப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in