அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

ராமர் கோயிலில் இன்று வழிபட்ட பிறகு 'ராமர் பாதை' என்ற சாலைப் பேரணியை பிரதமர் மேற்கொண்டார்.
அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
ANI

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபட்டார்.

அயோத்தியிலுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ல் நடைபெற்றது. அன்றைய நாளில் பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து ராமரை வழிபட்டார்.

இந்தத் திறப்பு விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி அயோத்தி செல்வது இதுவே முதன்முறை. ராமர் கோயிலில் இன்று வழிபட்ட பிறகு 'ராமர் பாதை' என்ற சாலைப் பேரணியை பிரதமர் மேற்கொண்டார். கடந்த 5 மாதங்களில் பிரதமர் மோடி அயோத்தியில் இரண்டாவது முறையாக இன்று சாலைப் பேரணி மேற்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதலிரு கட்ட வாக்குப்பதிவில் 16 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அயோத்திக்கு மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அயோத்தியில் பாஜக எம்.பி. லல்லு சிங்கை பாஜக மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர் ஆனந்த் சென் யாதவை லல்லு சிங் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in