நடிகை வைஜெயந்திமாலா - பிரதமர் மோடி சந்திப்பு!
நடிகை வைஜெயந்திமாலா - பிரதமர் மோடி சந்திப்பு!ANI

நடிகை வைஜெயந்திமாலா - பிரதமர் மோடி சந்திப்பு!

வைஜெயந்திமாலாவுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
Published on

ஒரு நாள் பயணமாக நேற்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது X தளத்தில் பகிர்ந்தார்.

தனது 16 வயதில் வாழ்கை (1949) என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் வைஜெயந்திமாலா. பரதநாட்டிய கலைஞருமான இவர் தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விருதுகள் 2024 அறிவிக்கப்பட்டன. இதில் வைஜெயந்திமாலாவுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் மோடி, வைஜெயந்திமாலாவை சந்தித்து பேசினார். வைஜெயந்திமாலா மோடிக்கு சால்வை அணிவித்துக் கௌரவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது X தளத்தில் கூறியதாவது:

“வைஜெயந்திமாலாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு சமீபத்தில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்திய சினிமாவிற்கு அளித்த பங்களிப்புக்காக, அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படுகிறார்” என்றார்

logo
Kizhakku News
kizhakkunews.in