கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள்கள் தங்கி தியானம் செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI

கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை மேற்கொண்டுள்ளார்.

7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் பிரதேசம், பீஹார், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களின் 57 தொகுதிகளில் பரப்புரை முடிந்தது. ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. விவேகானந்தர் மண்டபத்தில் அவர் 3 நாள்கள் தங்கி தியானம் செய்யவுள்ளார்.

பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனத்தையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்குச் சிறப்புப் படகு மூலம் சென்றார் மோடி. அங்குத் தனது தியானத்தை அவர் தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in