மிசோரத்திற்கு முதல் நேரடி ரயில் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி | Mizoram | PM Modi |

மாநிலம் முழுவதும் 45 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்களை உள்ளடக்கிய ரயில்வே பாதை தொடக்கம்....
மிசோரத்திற்கு முதல் நேரடி ரயில் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி | Mizoram | PM Modi |
https://x.com/narendramodi
1 min read

மிசோரம் மாநிலத்தில் பைரபி - சாய்ராங் புதிய ரயில் பாதையைப் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுதந்திரம் அடைந்த பின் மிசோரத்திற்கு அமைக்கப்படும் முதல் நேரடி ரயில் பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் மலைப்பகுதிகளால் ஆன மிசோரம் மாநிலத்தில் நேரடி ரயில்பாதை அமைக்க வேண்டும் என்பது பல காலமாக அம்மாநில மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், ரூ. 8,070 கோடி செலவில் மிசோரம் மாநிலம் தலைநகர் ஐஸ்வாலில் பைரபி - சாய்ராங் இடையிலான ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப்பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.

இந்த ரயில் பாதையைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அவர் நேரடியாக மிசோரம் செல்லவிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருந்தபடி, காணொலி காட்சி வழியாக பைரபி - சாய்ராங் ரயில்வே வழித்தடத்தை தொடங்கிவைத்தார்.

மேலும், மிசோராமில் ரூ. 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியபோது -

“இன்று முதல் இந்திய ரயில்வே வரைபடத்தில் ஐஸ்வாலும் இடம்பெறும். பல சவால்களை கடந்து பைரபி - சாய்ராங் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது நமது பொறியாளர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்போது மிசோரத்தின் சாய்ராங் நேரடியாக டெல்லியோடு ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல; மாற்றத்துக்கான உயிர்நாடி. இது மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இது வலு சேர்க்கும். சுற்றுலா மேம்படும். கடந்த 11 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். இந்த பகுதியை இந்தியாவின் வளர்ச்சிக்கான எந்திரமாக அமைந்து வருகிறது” இவ்வாறு உரையாற்றினார்.

Mizoram | PM Modi | Bairabi | Sairang |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in