ஜென் ஸி விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்: பிரதமர் புகழாரம் | PM Modi |

இந்தியாவின் தனியார் விண்வெளி திறமை உலகளவில் தனது முத்திரையைப் பதித்து வருகிறது....
ஜென் சி விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்: பிரதமர் புகழாரம்
ஜென் சி விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்: பிரதமர் புகழாரம்
1 min read

உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதள அமைப்பில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி தொழில் துறை நிறுவனமான ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்ஃபனைட் கேம்பஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் தனியாருக்கு சொந்தமான ராக்கெட் விக்ரம்1-ஐ அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

“இந்தியாவின் விண்வெளிப் பயணம் மிகக் குறைவான வளங்களுடன் தொடங்கியது. ஆனால் நமது எண்ணங்கள் ஒருபோதும் சுருங்கிவிடவில்லை. ஒரு காலத்தில் ராக்கெட்டின் பாகங்கள் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டன. இன்று உலகின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுதளங்களை நிறுவியிருக்கும் இந்தியா, கனவுகளை உறுதியான தீர்மானங்கள் மூலம் நிறைவேற்றியுள்ளது. பல தசாப்தங்களாக இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு இஸ்ரோ ஒரு புதிய பயணத்தை அளித்தது. மாறிவரும் இந்த காலகட்டத்தில், விண்வெளித் துறை விரிவடைந்து வருகிறது. இந்தியாவின் விண்வெளித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். புதிய விண்வெளிக் கொள்கையை உருவாக்கினோம். புதுமையுடன் ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்களை ஒருங்கிணைக்க முயற்சித்தோம். உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதள அமைப்பில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும்.

இந்த துறையில் தொடங்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய நம்பிக்கையைத் தருகின்றன. இதனால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்திய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கின்றனர். ஜென் ஸி பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், குறியீட்டாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உந்துவிசை அமைப்புகள், கூட்டுப் பொருட்கள், ராக்கெட் நிலைகள், செயற்கைக்கோள் தளங்கள் என அனைத்திலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத துறைகளில் இந்திய இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் தனியார் விண்வெளி திறமை உலகளவில் தனது முத்திரையைப் பதித்து வருகிறது. இந்தியாவின் விண்வெளித் துறை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும்” என்றார்.

Summary

Prime Minister Modi has said that India will emerge as a pioneer in the global satellite launch system.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in