இந்தியாவில் உருவாக்கி, உலகிற்கு வழங்குங்கள்: செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் அழைப்பு | PM Modi |

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா ஒரு பெரும் வாய்ப்பையும், நாளைய உலகிற்கான திட்டங்களையும் வகுக்கிறது....
இந்தியாவில் உருவாக்கி, உலகிற்கு வழங்குங்கள்: செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் அழைப்பு
இந்தியாவில் உருவாக்கி, உலகிற்கு வழங்குங்கள்: செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் அழைப்புANI
2 min read

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்குவது மட்டுமல்லாமல், அதனை வேகமாகப் பயன்படுத்தியும் வருகிறது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான மெட்டாவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் தலைமை அலுவலர் அலெக்ஸாண்டர் வாங்க், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியின் உரை

உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

“உலகம் தற்போது ஒரு புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. மனிதர்களும் அறிவுசார் அமைப்புகளும் இணைந்து செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை மிக வேகமாகத் தனது வாழ்வியலில் பயன்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா ஒரு பெரும் வாய்ப்பையும், நாளைய உலகிற்கான திட்டங்களையும் வகுக்கிறது.

செயற்கை நுண்ணறிவுக்கான மாணவ் அணுகுமுறை

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் அணுகுமுறையை விளக்கும் வகையில் மானவ் என்ற தொலைநோக்கு ஐந்தம்சப் பார்வையை அறிவிக்கிறேன். அதன்படி ஒழுக்க நெறிமுறை மற்றும் அறம் சார்ந்த அமைப்புகள், பொறுப்புமிக்க ஆளுமை, தேசிய இறையாண்மை, அனைவருக்கும் எளிதில் கிடைத்தல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, செல்லுபடியாகும் சட்டபூர்வமான தன்மை ஆகிய ஐந்து அம்சங்களை இந்தியா கூர்ந்து கவனிக்கிறது. இந்த தொலைநோக்குப் பார்வை 21-ஆம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகில் மனிதகுலத்தின் நலனுக்கான முக்கிய அங்கமாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு நம் கட்டுப்பாட்டில்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறமிருக்க, அதன் எதிர்மறை விளைவுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக டீப்ஃபேக் போன்ற போலியான உள்ளடக்கங்கள் சமூகத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் வாய்ப்புள்ளது. உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்து விவரங்கள் அடங்கிய குறியீடுகள் இருப்பது போல, டிஜிட்டல் உள்ளடக்கங்களிலும் அவை உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய உதவும் அங்கீகாரக் குறியீடுகள் இருக்க வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடு நமது கைகளில் இருக்க வேண்டும். பொது நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் வடிவமைக்க அழைப்பு

இந்தியாவின் பன்முகத்தன்மை, மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம் ஆகியவை செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளுக்கான இயற்கை மையமாக இந்தியாவை மாற்றியுள்ளது. இந்தியாவில் வெற்றி பெறும் எந்தவொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும் உலகளவில் வெற்றிகரமாகச் செயல்படும். எனவே, 'இந்தியாவில் வடிவமைத்து மேம்படுத்துங்கள், உலகிற்கும் மனிதகுலத்திற்கும் வழங்குங்கள்” என்றார்.

Summary

Inaugurating the India AI Impact Summit 2026 at Bharat Mandapam in New Delhi this morning, Mr Modi said, the world is entering an era where humans and intelligent systems co-create, co-work and co-evolve. He said, AI will make the work smarter, more efficient and more impactful.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in