புத்தரின் பாரம்பரியத்தைக் காக்கும் நாடு இந்தியா: பிரதமர் மோடி நெகிழ்ச்சி | PM Modi |

அடிமைத்தனம் நம் பாரம்பரியத்தை அழிப்பது போல் புத்தர் சின்னங்கள் திருடப்பட்டன...
புத்தரின் கண்காட்சியை திறந்து வைத்த பிரதமர் மோடி
புத்தரின் கண்காட்சியை திறந்து வைத்த பிரதமர் மோடிANI
1 min read

இந்தியா, புத்தரின் பாரம்பரியத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நாடாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில், புத்தரின் புனித சின்னங்கள் மற்றும் பழங்கால பொருள்களை உள்ளடக்கிய பிரமாண்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ‘ஒளியும் தாமரையும் - விழித்தெழுந்தவரின் புனிதப் பொருள்கள்’ என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சியில், நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, மீண்டும் தாயகம் கொண்டு வரப்பட்ட புனிதப்பொருள்கள், பெட்டகங்கள் மற்றும் கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தர் நினைவுச் சின்னங்கள் ஏலத்தை நிறுத்தினோம்

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: புத்தரின் நினைவுச்சின்னங்கள் நம்மிடையே இருப்பதற்கு நாம் இன்று நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது பாரம்பரியத்தை அடிமைத்தனம் எப்படி அழிக்கிறதோ அதே நிலைமைதான் புத்தரின் நினைவுச் சின்னங்கள் இந்தியாவிலிருந்து பறிக்கப்பட்டபோதும் நடந்தது. அவற்றை நம் நாட்டிலிருந்து எடுத்துச் சென்றவர்கள் அவற்றைச் சர்வதேச சந்தையில் ஏலம் விட முயன்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை, இந்த நினைவுச்சின்னங்கள் என்பது நமது இறைமை மற்றும் சமூகத்தின் பகுதியாகும். அதனால்தான் அவற்றின் ஏலத்தை நிறுத்தினோம்.

புத்தர் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியவர்

புத்தர் என் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். நான் புத்த மத போதனைகளின் முக்கியமான பகுதியில் பிறந்தேன்... எனது கர்மபூமியான சாரநாத். புத்தர் தனது முதல் போதனைகளை வழங்கிய இடம். அந்த பக்தியுடனே நான் சீனா, ஜப்பான், மங்கோலியா போன்ற நாடுகளுக்குச் சென்றபோதும் புத்தரின் பாரம்பரியத்தைப் பரப்பினேன்.

புத்தரின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நாடு

இந்தியா புத்தரின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவரது மரபுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நாடு. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ​​புத்தருடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான நினைவுச் சின்னங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நமது அரசாங்கம் அவற்றைப் பாதுகாப்பதோடு அடுத்த தலைமுறைக்கு வழங்கி வருகிறது. இன்று புத்த தளங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு புதிய வசதிகள் கட்டப்பட்டுள்ளன. புத்தருடன் தொடர்புடைய பாலி மொழியின் வளர்ச்சிக்காக நமது அரசு பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதனால்தான் அம்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Summary

Prime Minister Narendra Modi inaugurates the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, ‘The Light & the Lotus: Relics of the Awakened One’ at Rai Pithora Cultural Complex. He said ,"India is not just the protector of the heritage of Lord Buddha, but the carrier of His traditions" during his speech.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in