பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வடகிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆய்வுக்கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
ANI
1 min read

சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் வீசிய ரீமல் புயலால், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இவற்றில் சிக்கி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

புயலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு சார்பில் இன்று தில்லியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்குத் தலைமையேற்றார் பிரதமர் மோடி.

வடகிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் அங்கு தண்டவாளங்கள் நீரில் மூழ்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், மத்திய அரசு அங்குள்ள நிலைமைத் தொடந்து கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கிட அதிகாரிகள் களத்தில் வேலைபார்ப்பதாகவும் பதிவிட்டார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in