எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை மாற்றம்: பிரதமர் கவலை குறித்து தரவுகள் சொல்வது என்ன? | Demographic Change

மக்கள்தொகை மாற்றம் ஏற்படும்போது, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் அது ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்குகிறது.
எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை மாற்றம்: பிரதமர் கவலை குறித்து தரவுகள் சொல்வது என்ன? | Demographic Change
ANI
2 min read

சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை சுதந்திர தின உரையில் சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மக்கள்தொகை `வேண்டுமென்றே மற்றும் நன்கு சிந்தித்து தீட்டப்பட்ட சதித்திட்டத்தின்’ ஒரு பகுதியாக மாற்றப்படுவதாகக் கூறினார்.

`மக்கள்தொகை மாற்றம் ஏற்படும்போது, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் அது ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்குகிறது. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றத்தை அச்சுறுத்துகிறது. இது சமூக பதற்றத்திற்கான விதைகளையும் விதைக்கிறது.

எந்த நாடும் ஊடுருவல்காரர்களிடம் தன்னை ஒப்படைக்க முடியாது. உலகில் எந்த நாடும் அத்தகைய செயலில் ஈடுபடுவதில்லை - அப்படியானால் அவ்வாறு செய்ய இந்தியாவை எப்படி அனுமதிக்க முடியும்?’ என்று சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பல எல்லையோர மாநிலங்கள், குறிப்பாக வடகிழக்கு மற்றும் வடக்கு எல்லை மாநிலங்கள், பெரும்பாலும் தேசிய சராசரியைவிட அதிகமான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், இந்த நடைமுறை சீரானதாக இல்லை என்பதை கடந்த ஏழு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது.

மேலும் வட இந்தியாவில், எல்லையோர மாநிலங்களுக்கும், உள்நாட்டு மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி பெரும்பாலும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை.

வடகிழக்கு மற்றும் வடக்கு எல்லை மாநிலங்கள்

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம், வடக்கில் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்கள், தேசிய சராசரியை விட மிக அதிகமான மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.

கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) இருந்து மிகப்பெரிய அளவிலான இடம்பெயர்வைத் தொடர்ந்து, 1951–61-ல் திரிபுரா 78.7% வளர்ச்சியைப் பதிவு செய்தது. அஸ்ஸாம் பல தசாப்தங்களில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது (1951–61-ல் 35% மற்றும் 1961–1971-ல் 34.9%).

1980-கள் வரையில் நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர் அதிக வளர்ச்சி விகிதங்களை (சராசரியாக பத்தாண்டுகளுக்கு 30%-60%) பதிவு செய்தன, பின்னர் அவை குறைந்தன; 2001–11-ல் மிகவும் அரிதான வகையில் நாகாலாந்து எதிர்மறை வளர்ச்சி விகிதத்தைப் (-0.5%) பதிவு செய்தது, இது ஒருவேளை இடம்பெயர்வு அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம்.

ஒரு தசாப்தத்திற்கு 20% முதல் 30% வரை என்று ஜம்மு காஷ்மீர் மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், அனைத்து எல்லையோர மாநிலங்களும் நீடித்த அதிகப்படியான வளர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

பல தசாப்தங்களாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் தேசிய சராசரிக்கு அருகில் இருந்தன, மேலும் 2001–11-ல் தேசிய சராசரியைவிட அஸ்ஸாமில் மக்கள்தொகை வளர்ச்சி குறைவாக இருந்தது.

ஹிந்தி (வட) மாநிலங்கள்

வடக்கில் அதிக வளர்ச்சி என்பது எல்லையோர மாநிலங்களின் தனிச்சிறப்பாக மட்டுமே இருந்ததில்லை.

உத்தரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற ஹிந்தி மாநிலங்கள் தொடர்ந்து தேசிய சராசரியைவிட அதிகமான மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த விகிதங்கள் பெரும்பாலும் எல்லையோர மாநிலங்களுடன் போட்டியிடுகின்றன அல்லது அவற்றையும்விட அதிகமாக இருக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in