

தமிழ்நாட்டில் பிஹார் மக்களை திமுக இழிவாக நடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆர்ஜேடி - காங்கிரஸ் இணைந்துள்ள இண்டியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். பாஜக - ஜேடியு இணைந்துள்ள என்டிஏ கூட்டணி சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நேற்று (அக்.29) முசாபர்பூரில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ஒரு வாக்குக்காக பிரதமர் மோடி நடனமும் ஆடுவார் என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதே முசாபர்பூர் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
”ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் குடும்ப அரசியலால் வந்தவர்கள். அவர்கள் நேற்று என் மீது அவதூறுகளைத் தெரிவித்தனர். உழைத்துக் கொண்டிருப்பவனை குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் இழிவுதானே செய்வார்கள். அவர்களால் ஏழை, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருந்து ஒருவர் மேலே வருவதைப் பொறுத்துக்கொள முடியும். ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் இளவரசர்கள். ஒருவர் நாட்டின் ஊழல் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். ஒருவர் பிஹாரின் ஊழல் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். இருவரும் சேர்த்து பொய் வாக்குறுதிகளால் செய்யப்பட்ட கடை ஒன்றைத் திறந்திருக்கிறார்கள். இருவரும் ஆயிரம் கோடி ஊழல் வழக்குகளில் ஜாமினில் விடுவிக்கப்பட்டவர்கள்” என்றார்.
தொடர்ந்து சப்ரா பகுதியில் அவர் பேசியதாவது:-
காங்கிரஸை சேர்ந்த ஒருவர் பஞ்சாப்பில் முதலமைச்சராக இருந்தபோது ஒரு பொதுக்கூட்டத்தில் பிஹார் மக்களைப் பஞ்சாபுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார். அப்போது மேடையில் இருந்த காங்கிரஸ் குடும்பத்தின் பெண், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கைதட்டி ரசித்தார். கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியினர் பிஹார் மக்களை அவமதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவும் பிஹார் மக்களை துஷ்பிரயோகம் செய்கிறது. இந்தத் தேர்தலில் யாரெல்லாம் அவர்கள் மாநிலங்களில் பிஹார் மக்களை இழிவுப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் இண்டியா கூட்டணிக்காக பிரசாரத்திற்கு அழைத்துள்ளார்கள்.
500 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குப் பயணம் போக நேரம் இருக்கும் ஆர்ஜேடி - காங்கிரஸின் தலைவர்களுக்கு ராமர் கோயிலுக்குச் செல்ல மட்டும் நேரம் கிடைப்பதில்லை. அவர்கள் ராமர் கோயிலில் சென்று பிரார்த்தனை செய்ததை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள்தான் இப்போது சத் பூஜையையும் அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள்.
காட்டு ராஜ்ஜியத்தின் தலைவர்கள் மக்களைத் தொடர்ந்து தவறான திசையில் வழிநடத்துகிறார்கள். திருடுகிறார்கள். ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை ஒரு விலைப்பட்டியல். மக்களிடம் வழிப்பறி செய்து, லஞ்சம் பெற்று, திருடி, ஊழல் செய்வதே அவர்களது அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம்.” என்Oறார்.
PM Modi complained that Congress leaders in Karnataka and Telangana abuse people from Bihar, and their ally, DMK, also abuses Biharis in Tamil Nadu during his Bihar election campaign.