

உலகமே ஒரே குடும்பம் என்ற வசுதைவ குடும்பகக் கொள்கையின் வாழும் வடிவமாகத் திகழ்ந்தவர் சத்திய சாய் பாபா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் கடந்த 1926-ல் பிறந்த ஆன்மிக குருவான சத்திய சாய் பாபாவுக்கு உலகம் முழுவதிலும் பக்தர்கள் உள்ளார்கள். கடந்த 2011 ஏப்ரலில் அவர் சமாதி அடைந்தார். அவரது ஆஸ்ரமத்திலேயே அவருக்கு மகாசமாதி எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
சத்திய சாய் பாபாவின் நினைவு நூற்றாண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியான இன்றைய விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் விழாவில் சாய் பாபா ஆரத்தியில் கலந்து கொண்டு வழிபட்டார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து சத்ய சாய் பாபா நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர்கள், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது:-
“சத்திய சாய் பாபா நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது போதனைகளும் அன்பும், சேவை மனப்பான்மையும் லட்சக்கணக்கான மக்களை வழிநடத்தி வருகிறது. சுமார் 140 நாடுகளில் உள்ள அவரது பக்தர்களுக்குப் புதிய பாதையையும் புதிய ஒளியையும் காட்டி வருகிறது. உலகமே ஒரே குடும்பம் என்ற வசுதைவ குடும்பகக் கொள்கையின் வாழும் வடிவமாக சத்திய சாய் பாபா திகழ்ந்திருக்கிறார். அவருடைய நூற்றாண்டு விழா உலக அன்பு, அமைதி மற்றும் சேவையின் பெரும் திருவிழாவாக அமைந்திருக்கிறது” என்றார்.
Prime Minister Narendra Modi on Wednesday described the birth centenary celebrations of Sri Sathya Sai Baba as a "divine blessing" and hailed him as the embodiment of 'Vasudhaiva Kutumbakam'. While addressing a public gathering in Puttaparthi, the Prime Minister, who earlier offered prayers at the Mahasamadhi, said being present in the revered town was both an emotional and spiritual experience.