கடந்த ஜூலை 21-ல் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்குப் பிறகு இன்றுடன் (ஆக. 21) நிறைவடைய உள்ளது.
கூட்டத்தொடரின் பெரும்பகுதி எதிர்க்கட்சிகளின் அமளியால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் இந்தக் காலகட்டத்தில், மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் மேற்கொள்ளும்படி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தார்கள். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பிஹாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்த விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அது குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்:
கோவா மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2025
வணிகக் கப்பல் மசோதா, 2025
மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2025
மணிப்பூர் ஒதுக்கீடு (எண்.2) மசோதா, 2025
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025
தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா, 2025
வருமான வரி மசோதா, 2025
வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025
இந்திய துறைமுகங்கள் மசோதா, 2025
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2025
இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா, 2025
ஆன்லைன் விளையாட்டு ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்:
சரக்கு ஏற்றிச் செல்லுதல் மசோதா, 2025 (எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது)
கடல் வழியாக பொருள்களை எடுத்துச் செல்லுதல் மசோதா, 2025
கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, 2025