குளிர்காலக் கூட்டத்தொடர்: இரு அவைகளும் டிசம்பர் 2 வரை ஒத்திவைப்பு

குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் மக்களவை 54 நிமிடங்களுக்கும், மாநிலங்களவையும் 75 நிமிடங்களுக்கும் மட்டுமே செயல்பட்டுள்ளன.
குளிர்காலக் கூட்டத்தொடர்: இரு அவைகளும் டிசம்பர் 2 வரை ஒத்திவைப்பு
1 min read

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், டிசம்பர் 2 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கியது. குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியிலிருந்து அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்காவில் அதானி மீது குற்றம்சாட்டப்பது தொடர்பாகவும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. குறிப்பாக அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை கோரி வருகிறார்கள்.

இதன் காரணமாக நாடாளுமன்றம் நவம்பர் 25 முதல் சரிவர இயங்கவில்லை. இன்றும் இதே நிலை நீடித்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிசம்பர் 2 வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதலில் மாநிலங்களவை டிசம்பர் 2 வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில், "இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி வருகிறோம். நம் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்து இல்லை. விதி எண் 267 என்பது இடையூறு ஏற்படுத்துவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு அனைத்து 16 கவன ஈர்ப்புகளும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையைத் தொடர்ந்து, மக்களவையும் தொடர்ந்து 4-வது நாளாக முடங்கியது. குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் மக்களவை 54 நிமிடங்களுக்கும், மாநிலங்களவையும் 75 நிமிடங்களுக்கும் மட்டுமே செயல்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in