ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: ஒரு தீவிரவாதி மரணம்!

பாதுகாப்புப் படையினரை எதிர்த்து கண்மூடித்தனமான முறையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: ஒரு தீவிரவாதி மரணம்!
1 min read

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (நவ.10) காலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. நேற்று, பாராமுல்லாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

தீவிரவாதிகளின் இருப்பு குறித்த உளவுத்தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் தலைநகரங்களில் ஒன்றான ஸ்ரீநகருக்குக் கிழக்கே உள்ள ஸபர்வான் காட்டுப்பகுதியில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினரும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த தாக்குதல் குறித்த தகவல்கள் அடுத்த சில மணிநேரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும், நேற்று (நவ.10) மாலை ஸ்ரீநகருக்கு வடமேற்கே உள்ள பாரமுல்லா மாவட்டத்தின், சோபோரை ஒட்டியிருக்கும் ராஜ்புரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதை ஒட்டி, தீவிரவாதிகளை எதிர்த்து இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை எதிர்த்து கண்மூடித்தனமான முறையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ராஜ்புராவில் இன்று காலையும் துப்பாக்கிச் சூடு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in