நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம் | Fuel Shortage | Hardeep Singh Puri |

இது வதந்திகள் பரப்புவதற்கோ போலி கதைகள் உருவாக்குவதற்கோ உரிய தருணம் அல்ல...
No shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil: Hardeep Puri tells Lok Sabha
நாட்டில் பெட்ரோ, டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்ANI
2 min read

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சின் புரி, நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நடந்துவரும் இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் இடையேயான போரால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக தங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக மக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்துள்ளனர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் விளக்கம்

அப்போது விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:-

நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற ஒரு தருணத்தை எதிர்கொண்டதில்லை. இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோக நிலை பாதுகாப்பாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வழங்கப்பட்டிருக்கக்கூடிய அளவை விட அதிகமான அளவு எண்ணெய் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டுள்ளது. நெருக்கடிக்கு முன்பு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் வந்தது. பிரதமரின் சிறப்பான ராஜதந்திரத் தொடர்பு மற்றும் நல்லெண்ணத்தால், இந்தியா இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட அதே காலகட்டத்தில், வழக்கமாக வந்திருக்கக்கூடிய அளவை விட அதிகமான கச்சா எண்ணெய் அளவுகளைப் பாதுகாத்துள்ளது.

பற்றாக்குறை இல்லை

சுத்திகரிப்பு ஆலைகள் உயர் திறனுடன் இயங்கி வருகின்றன. பல இடங்களில் 100%-க்கு மேல் திறனுடன் செயல்படுகின்றன. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமானத்திற்கான எரிபொருள் என எதற்கும் பற்றாக்குறை இல்லை. இவை முழுமையாக கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் அல்லாத ஆதாரங்களிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி, மோதல் தொடங்குவதற்கு முன்பு 55% ஆக இருந்தது இப்போது சுமார் 70% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் எண்ணெய் ஆதார நாடுகள் 2006 மற்றும் 2007-ல் 27-ஆக இருந்தது இப்போது 40 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு ரீதியான பன்முகப்படுத்தல், மற்ற நாடுகளுக்கு இல்லாத விருப்பங்களை இந்தியாவுக்கு அளித்துள்ளது.

சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு

பெரிய அளவிலான இயற்கை எரிவாயு சரக்குகள் மாற்று வழிகள் மூலம் கிட்டத்தட்ட நாள்தோறும் வருகின்றன. நீண்டகால மோதல் ஏற்பட்டாலும் இந்தியாவிடம் போதுமான எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக ஏற்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் தொழில்துறைக்கும் மின்சார உற்பத்தி முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது. கொள்முதல் இப்போது தீவிரமாக பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யாவிலிருந்து சரக்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாள்களில் சுத்திகரிப்பு ஆலைகள் உத்தரவுகள் மூலம் சமையல் எரிவாயு உற்பத்தி 28% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மோடி அரசின் மிக முக்கிய முன்னுரிமை, இந்தியாவின் 33 கோடி குடும்பங்களின் சமையலறைகள் – குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியோரின் – எந்தப் பற்றாக்குறையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதுதான். உள்நாட்டு விநியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது. விநியோக சுழற்சி மாற்றப்படவில்லை.

வதந்திகள் பரப்ப வேண்டாம்

இது வதந்திகள் பரப்புவதற்கோ போலி கதைகள் உருவாக்குவதற்கோ உரிய தருணம் அல்ல. பதிவாகியுள்ள வரலாற்றில் மிகக் கடுமையான உலகளாவிய எரிசக்தி இடையூறை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. விநியோகம் சீராக நடைபெறுகிறது. வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு எரிவாயு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு உற்பத்தி 28% உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா ஒன்றிணைந்து எரிசக்தி போராளிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டும், நெருக்கடியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்குப் பின்னால் நிற்க வேண்டும், தேசிய நலன்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும்.” என்றார்.

Summary

No shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil: Hardeep Puri tells Lok Sabha India has sufficient gas production, supply to sustain even if West Asia conflict prolongs

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in