நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை: தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை: தர்மேந்திர பிரதான்
1 min read

நடப்பு நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) தொடங்கியது. கடந்த நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மக்களவை தொடங்கியதும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று முதல் நிகழ்வாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினார்.

`கடந்த 7 வருடங்களில் 70 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. வருங்காலத்தில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் நீட் தேர்வில் நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன. இந்த விவாகரத்தில் நடந்த முறைகேடுகளால் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வாரா?’ என்று கேள்வி எழுப்பினார் மாணிக்கம் தாகூர்.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், `கடந்த 7 வருடங்களாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய தேர்வு முகமை 240-க்கும் அதிகமான தேர்வுகளை நடத்தியுள்ளது.

நீட் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, அது சம்மந்தமாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in