பிரசாரத்தில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் நிதின் கட்கரி மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மஹாராஷ்டிரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, மேடையில் மயங்கி விழுந்தார்.

எனினும், வெயில் காரணமாக ஏற்பட்ட மயக்கம் என்பதால், இதிலிருந்து குணமடைந்து அவர் மீண்டும் பிரசாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

தனது உடல்நிலை குறித்து நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"மஹாராஷ்டிர மாநிலம் புசத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது வெயில் காரணமாக அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால், தற்போது நான் முழு ஆரோக்கியத்துடன், அடுத்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருத் புறப்படுகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.

பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் நிதின் கட்கரி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் இவர் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 101 சதவீதம் வெற்று பெறுவேன் என நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in