ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலத்தை, 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காகவும், கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பே தொடங்கப்படும்.
இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலத்தை, 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
வெளிநாட்டு பயணிகளுக்கு முன்பதிவு செய்வதற்கான காலம் 365 நாட்கள் என்று இருந்ததில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேபோல் தாஜ் எக்ஸ்பிரஸ், கோம்தி எக்ஸ்பிரஸ் உள்பட சில பகல்நேர ரயில்களுக்கான முன்பதிவு காலத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும், அக்.31 வரை செய்யப்பட்ட முன்பதிவுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.