புதிய வருமான வரி மசோதா நாளை (பிப்.12) தாக்கல்!

நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படும்.
புதிய வருமான வரி மசோதா நாளை (பிப்.12) தாக்கல்!
ANI
1 min read

எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் நாளை (பிப்.13) தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த பிப்.1-ல் 2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது எளிமைப்படுத்தப்பட்ட, புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதாவுக்கு கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை. இந்நிலையில், புதிய வருமான வரி மசோதா நாளை (பிப்.13) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படும் என்றும், நிலைக்குழு வழங்கும் திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை மசோதாவில் சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மசோதாவில் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஷரத்துகள் இருக்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு எதிரான வழக்குகளை குறைப்பதற்கு இது வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் மசோதா மேற்கொள்ளாது.

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டம் 64 ஆண்டுகள் பழமையானதாகும். இதனை மறு ஆய்வு செய்ய குழுவை அமைத்தது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவின் ஷரத்துகளை ஆய்வு செய்ய 22 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in