நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் பல்வேறு மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 14 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

மாணவர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரைகள்

* நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும்.

* தேர்வு மையங்களுக்குள் பேப்பர், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், பெல்ட், வாட்ச் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

* எளிதில் தெரியும்படியான தண்ணீர் பாட்டில்களை மட்டுமே கொண்டு செல்லலாம். ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது.

* முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in