தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்: சஞ்சய் நிஷாத்

"தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதற்கட்ட பட்டியல் எங்களுடைய பட்டியல்."
சஞ்சய் நிஷாத் (கோப்புப்படம்)
சஞ்சய் நிஷாத் (கோப்புப்படம்)ANI
1 min read

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என என நிஷாத் கட்சியின் நிறுவனரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.

"பாஜக, எங்களுடைய மூத்த அண்ணனைப் போன்றது. நாங்கள் அவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக இணைந்து செயல்படுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதற்கட்ட பட்டியல் எங்களுடைய பட்டியல். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் தொகுதியில் பிரவீன் குமார் நிஷாத்தை (சஞ்சய் நிஷாத்தின் மகன்) பாஜக களமிறக்கியுள்ளது. தற்போது, அவர் இந்தத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகவும் உள்ளார்.

பிரதமர் மோடி உட்பட 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in