தில்லி முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாரா?

ஸ்வாதி மாலிவால் தரப்பில் முறையாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
தில்லி முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாரா?

ஆம் ஆத்மி எம்.பி.யும், தில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திப்பதற்காக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் முதல்வர் இல்லத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, முதல்வரைச் சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், முதல்வரின் உதவியாளரால் அவர் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. காவல் துறையிடம் தொலைபேசி வாயிலாகப் புகாரளித்தவுடன் தில்லி காவல் துறையினர் முதல்வர் இல்லத்துக்குச் சென்றதாகவும், அங்கு ஸ்வாதி மாலிவால் காணப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக, டிசிபி மனோஜ் மீனா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

"காவல் துறை கட்டுப்பாட்டு அறை மூலம் சிவில் லைன்ஸ் காவல் துறைக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் முதல்வர் இல்லத்தில் வைத்து, தான் தாக்கப்பட்டதாக ஒரு பெண் காலை 9.34-க்கு புகார் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து எம்.பி. ஸ்வாதி மாலிவால் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு வந்தார். எனினும், பிறகு புகாரளிப்பதாகக் கூறி அவர் புறப்பட்டுச் சென்றார்" என்றார் டிசிபி மனோஜ் மீனா.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும், மூன்று நாள்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தில்லி காவல் துறையை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in