மாநிலங்களவைத் தேர்தல்: ஜெ.பி. நட்டா குஜராத்திலிருந்து போட்டி

ஜெ.பி. நட்டா தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)
ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)ANI

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத்திலிருந்து போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், அந்த மாநிலத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான சமீபத்திய வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. குஜராத்திலிருந்து ஜெ.பி. நட்டா, கோவிந்த்பாய், மயங்க்பாய் நாயக் மற்றும் ஜஷ்வந்த்சின் பர்மர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அசோக் சவான், மேதா குல்கர்னி மற்றும் அஜித் கோப்சத்தே ஆகியோர் மகாராஷ்டிரத்திலிருந்து வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜெ.பி. நட்டா தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து பாஜகவால் வெல்ல முடியாது என்பதால் ஜெ.பி. நட்டா குஜராத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in