வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI
1 min read

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பிரதமர் மோடி நாளை வயநாடு செல்கிறார்.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 400 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி நாளை வயநாடு செல்கிறார்.

சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் நேரில் சந்திக்கவுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in