பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடிப்பார்கள்: பிரதமர் மோடி

தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிவுக்கு வரும் நிலையில், இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன. 22 அன்று நடைபெற்றது. ராமர் சிலை முன்பு சிறப்புப் பூஜைகளை செய்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், “பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும்” என மோடி பேசியுள்ளார்.

மோடி பேசியதாவது:

“நாட்டின் வளர்ச்சிக்காக போராடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய இண்டியா கூட்டணி ஒரு புறமும் உள்ளன. தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிவுக்கு வரும் நிலையில், இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள். எங்கே புல்டோசரை பயன்படுத்த வேண்டும், எங்கே பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து அவர்கள் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து கற்றுகொள்ள வேண்டும். பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in