மோடி 3.0 அரசின் முதல் மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து, 2024-2025 நிதியாண்டுக்கான ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டையும் மக்களவையில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
மோடி 3.0 அரசின் முதல் மத்திய பட்ஜெட்
1 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலில் வென்று கடந்த ஜூன் மாதம் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

முந்தைய ஆண்டுகள் போல இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட், அதாவது டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய பட்ஜெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து `மத்திய பட்ஜெட் கைபேசி செயலியில்’ பட்ஜெட் உரையைக் காணலாம்.

மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது தொடர்ந்து ஆறு முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் (1959-1964) சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார்.

மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து, இன்று 2024-2025 நிதியாண்டுக்கான ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டையும் மக்களவையில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். 2019-ல் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவானது. அதைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்று ஜம்மு - காஷ்மீரின் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் மீதான விவாதம் நாளை (ஜூலை 24) மக்களவையில் தொடங்கும். விவாதத்தின் முடிவில் நிதியமைச்சர் பதிலுரை வழங்குவார். அதன் பிறகு சில நாட்கள் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும். பிறகு மீண்டும் கூடும் மக்களவையில் மத்திய அமைச்சகங்களுக்கான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்களும், வாக்கெடுப்பும் நடைபெறும். வரும் ஆகஸ்ட் 12 பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாக அறிவிக்கப்படுள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in