ஜூன் 9-ல் மோடி அரசு பதவியேற்பு விழா!

முன்னதாக, ஜூன் 8-ல் பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மோடி
மோடிANI

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஜூன் 9-ல் பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வென்றுள்ளன. ஆட்சியமைப்பதற்காக தனிப் பெரும்பான்மையைப் பெறாததால், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது.

இதைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் மோடி ஜூன் 9 அன்று மாலை 6 மணியளவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னதாக ஜூன் 8-ல் பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என்றும், ஜூன் 17-ல் மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in