ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து மருமகன் ஆகாஷ் ஆனந்த் நீக்கம்: மாயாவதி

பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க உ.பி. அரசு தவறிவிட்டதாகவும், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 16 ஆயிரம் கோடியைப் பெற்றதாகவும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆகாஷ் ஆனந்த்.
ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து மருமகன் ஆகாஷ் ஆனந்த் நீக்கம்: மாயாவதி

தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் வாரிசு பொறுப்பிலிருந்து தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை நீக்குவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

கட்சியின் நலன் சார்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், முதிர்ச்சியடையும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மாயாவதியின் மருமகனான ஆகாஷ் ஆனந்த் கடந்த மாதம் உத்தரப் பிரதேச அரசை விமர்சித்துப் பேசினார். "இது புல்டோசர் மற்றும் துரோகிகளின் அரசு. இளைஞர்களைப் பசியில் வாட வைத்து, முதியவர்களை அடிமையாக்குவது ஒரு பயங்கரவாத அரசு. இதுமாதிரியான அரசை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்தான் நடத்துவார்கள்" என்று ஆகாஷ் ஆனந்த் பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 28-ல் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க உத்தரப் பிரதேச அரசு தவறிவிட்டதாகவும், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 16 ஆயிரம் கோடியைப் பெற்றதாகவும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆகாஷ் ஆனந்த்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in