கங்கனாவை எதிர்த்துப் போட்டியிடுவது யார்?

முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி சண்டிகரில் போட்டியிடுகிறார்.
சண்டிகரில் போட்டியிடும் மணீஷ் திவாரி
சண்டிகரில் போட்டியிடும் மணீஷ் திவாரி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கங்கனா ரணாவத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கு 16 பேர் அடங்கிய அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி சண்டிகரில் போட்டியிடுகிறார். இவர் தற்போது பஞ்சாப் மாநிலம் ஆனந்த்பூரில் சாஹிப் தொகுதியிலிருந்து எம்.பி.யாக உள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக விக்ரமாதித்ய சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங்கின் மகனான இவர் அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தப் பட்டியலுடன் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in