
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நெற்றியில் ரத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
எங்கள் தலைவர் மமதா பானர்ஜிக்குப் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று திரிணமூல் காங்கிரஸ், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, மமதாவின் நெற்றியில் ரத்தம் வழிகிற, ஆழமான வெட்டுக்காயம் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது.
தனது வீட்டினுள் கீழே விழுந்ததால் அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் தேவையான பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மமதாவின் உறவினர்கள் இந்தத் தருணத்தில் அவருக்கு உறுதுணையாக உள்ளார்கள்.