ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம்: 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!

6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம்: 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!
ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம்: 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!@theglocaljournal
1 min read

மஹாராஷ்டிரத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சியில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது 26 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஆன்வி காம்தார் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இவருக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் மஹாராஷ்டிரத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு சென்ற ஆன்வி காம்தார், அங்கு ரீல்ஸ் எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராத வகையில் தவறி விழுந்தார்.

300 அடி பள்ளத்தில் விழுந்த அவரை மீட்புப்படையினர் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in